தமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது!

14

சுவிஸ் ஜெனீவா முன்றலில் தொடங்கிய மிதியுந்துப் பயணனமானது, தமிழீழமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்திக் கூறி பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு ஆயிரத்து முந்நூற்றி முப்பது(1330)கிலோ மீற்றர்களைக் கடந்து இன்று மாலை 16.00 மணியளவில் பெல்சியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது.

நாளைய தினம் 30.09.2013 (திங்கட்கிழமை) அன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீதிகேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களினதும், மக்களினதும் அர்ப்பணிப்பை கருத்தில்கொண்டு, எங்களின் உரிமைகளுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி சனநாயக வழியில் நீதி கேட்க அணியணியாய் அணிதிரள்வோம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக.

 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

முந்தைய செய்திடென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி
அடுத்த செய்திநோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு