தமிழர் இன வரலாறு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

891

தமிழர் இன வரலாறு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

  • வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது!
    – புரட்சியாளர் லெனின்
  • வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது!
    – அண்ணல் அம்பேத்கர்
  • வரலாறு என்பது கடந்த காலச் செய்திகளைச் சேமித்து வைக்கும் ஏடல்ல; அது நிகழ்காலத்திற்கான அடித்தளமும் எதிர்காலத்திற்கான உயிர்த்தொடர்பும்!
    – ஹிட்லர்
  • வரலாற்றைப் படி வரலாற்றைப் படை வரலாறாகவே வாழ்!
    – தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
  • வரலாற்றைக் கையில் எடுத்த எல்லா இனங்களும் பாதுகாப்பாக வாழ்கின்றன.

எம்மின வரலாறு

வரலாற்றில் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நாங்கள் வாசித்து நேசித்துத் தெரிந்து கொள்ளாமல் எழமுடியாது.

வரலாறு இல்லாதவனுக்கு நிகழ்காலம் இல்லை!
நிகழ்காலம் இல்லாதவனுக்கு எதிர்காலம் இல்லை!
எம் இனவரலாற்றை எங்கள் பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • ஐம்பதாயிரம் ஆண்டுக்கு மூத்த நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைக்கொண்ட தமிழர் தேசிய இனம், திராவிடர் ஆட்சிகளால் ஐம்பது ஆண்டுக்குள் குறுக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்க வேண்டும்.

பாடங்களில் முன்னோர்கள்

அதிலிருந்து மீள்வதற்கு எமது இனவரலாறு, எமது முன்னோர்களுடைய வீரம் செறிந்த போராட்டங்கள், ஆட்சிமுறை, அவர்களுடைய ஒழுக்கம், அவர்களுடைய செயலாண்மைத் திறன் போன்றவற்றை அறிந்து தெரிந்து கொள்வதற்காக எமது பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்படும்.

  • அதன்படி கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், இராசேந்திரச் சோழன், எல்லாளன், பண்டாரவன்னியன், பூலித்தேவன், வேலுநாச்சியார், தீரன்

சின்னமலை, மருதபாண்டியர், அழகுமுத்துக்கோன், சுந்திரலிங்கம் போன்ற எம் இனமுன்னோர்களின் வரலாறுகள் எம் பிள்ளைகளுக்குப் பாடமாக வைத்து பயிற்றுவிக்கப்படும்.

வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது!

 

முந்தைய செய்திஅயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திதமிழ்த் தேசிய இனம் எதிர் கொள்ளும் சிக்கல்களும் – தீர்வும் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு