தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .

20

பிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே  நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில்  ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  அந்த அமைப்பு தமது இணையத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததையடுத்து  பிரிட்டனில் வாழும் தமிழர்கள் ராஜபக்சேவின் வருகையை  கண்டித்து விமான நிலையத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் முடிவு செய்திருந்தது.இந்நிலையில் ராஜபக்சே ஆற்றவிருந்த உரை  தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தமுடியாது என தெரிந்ததாலும், நேற்றையதினம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியுமே இச் சிறப்புரை ரத்துச் செய்யப்பட்தற்கு  காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே  ரத்துச் செய்யப்பட்டதாகவும், அதனால் தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், ஈழத்தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதனால் தாம் வருத்தப்படுவில்லை என்றும் இந்த முறை இல்லையென்றாலும் அடுத்த முறை பிரிட்டனிலோ  அல்லது வேறொரு நாட்டிலோ உரையாற்றுவேன் என்று ராஜபக்சே தெரிவித்ததாக செய்திகள் தெரிவிகின்றன. ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டாலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில்  ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு தமது இணையத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததையடுத்து பிரிட்டனில் வாழும் தமிழர்கள் ராஜபக்சேவின் வருகையை  கண்டித்து விமான நிலையத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் ராஜபக்சே ஆற்றவிருந்த உரை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தமுடியாது என தெரிந்ததாலும், நேற்றையதினம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியுமே இச் சிறப்புரை ரத்துச் செய்யப்பட்தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே ரத்துச் செய்யப்பட்டதாகவும், அதனால் தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், ஈழத்தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதனால் தாம் வருத்தப்படுவில்லை என்றும் இந்த முறை இல்லையென்றாலும் அடுத்த முறை பிரிட்டனிலோ அல்லது வேறொரு நாட்டிலோ உரையாற்றுவேன் என்று ராஜபக்சே தெரிவித்ததாக செய்திகள் தெரிவிகின்றன. ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டாலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்திmaveerar thina oorvalam.mp4
அடுத்த செய்திWikiLeaks cables: ‘Sri Lankan president responsible for massacre of Tamils’