தமிழக மீனவர்கள் மீது இலங்கை இனவெறி கடற்படை வெறித்தாக்குதல். 30 மீனவர்கள் படுகாயம்.

32

தமிழக மீ்னவர்கள் மீது இலங்கை இனவெறி கடற்படை காடையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். நடுக்கடலில் நடந்த இந்த அட்டூழியச் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.

இராமேஸ்வரம், வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கச்சதீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கைப் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களைத் கடுமையாக தாக்கினர். மீனவர்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகள்,உயர்ரக மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 30 மீனவர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் அனைவரையும் மிரட்டிய கடற்படை அங்கிருந்து கரைக்கு திரும்புமாறு விரட்டியது.

இதையடுத்து தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். இதுதொடர்பாக இராமேஸ்வரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசு தங்கள் கடற்படை இதுபோன்று செய்யவில்லை என்று ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறது. தொடர்ந்து நடக்கும் இந்த கொடூரத்துக்கு இந்திய அரசு இன்றளவும் மவுனம் காப்பதோடு மட்டுமல்லாமல் தன் சொந்த நாட்டு மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவப்படையினருக்கு இந்திய அரசே தமிழக பயிற்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்
அடுத்த செய்திilangai meethu porulaathaara thadai seeman nermugam 25 07 11