தமிழகம் தழுவிய இரயில் மறியல் போராட்டம்!

16

சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடக்ககூடாது சிறீலங்காவை காமன்வெல்த அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் எழுச்சி கொண்டுள்ளது.

அந்தவகையில் இன்று பல இடங்களில் புகையிரதங்களை மறித்து பேராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் மாணவர்கள் குதித்துள்ளார்கள்

1.இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்த கூடாது
2.இலங்கையை காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்தே நீக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய நகரகங்களில் மாணவர்கள் இரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.அதேவேளை கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருகிறார்கள் ..

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கைதைத் தொடர்ந்து 5 செங்கல்பட்டு சட்ட மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி கால வரையற்ற பட்டினிப் போரை தொடர்ந்தவண்ணமுள்ளார்கள்.

முந்தைய செய்திபேரறிவாளனின் உயிர் வலி ஆவண படத்தின் பாடல் வெளியிடப்பட்டது
அடுத்த செய்திபொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!