தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூரில் முற்றுகை போராட்டம்

89

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் எம் கல்வி எம் மக்களுக்கானது என்ற முழக்கத்தோடு கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைமையில் நமது உறவுகள் இன்று (22/08/2013) கடலூர் கிருஷ்ணசாமி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்து கல்வி கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடு!

பெற்றொர்கள் செலுத்தும் அனைத்து கல்வி கட்டணத்திற்கும் முறையான ரசீது வழங்க ஏற்பாடு செய்!

அனைத்து கல்வி கட்டணங்களையும் வங்கிகள் மூலம் மட்டுமே செலுத்த வழி வகை செய்!

தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை திரும்ப பெறும் அடாவடித்னத்தை உடனடியாக நிறுத்து!

அரசு நிர்ணயித்த தனியார் கல்விக் கட்டண பட்டியலை பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்!

என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் கடலூர் குப்புசாமி, பிரபு, திரு, செந்தில், தனசேகரன், சிதம்பரம் பாலு, நெய்வேலி ஜின்னா, முருகேசன், பண்ருட்டி வெற்றிவேலன், சையத்பாட்சா, குறிஞ்சிப்பாடி தாசு உட்பட திரளான நாம் தமிழர் உறவுகள் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றனர். போரட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

 

மாவட்ட ஆட்சியரிடம் 10.06.2013 முதல் 02.08.2013 வரை அளிக்கப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

 
முந்தைய செய்திகுப்பை கிடங்கை அகற்ற கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
அடுத்த செய்தி“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம்