தஞ்சை கிழக்கு மாவட்டம், குடந்தையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

48

23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும் ,2014 வருடத்திய மாவீரர் தினமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தஞ்சை கிழக்கு மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர்.இரா.வினோபா தலைமை தாங்கினார். தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 60 இளந்தமிழர்கள் குருதிக்கொடை அளிப்பார்கள் என முன்னதாக திட்டமிடப்பட்டது. ஆனால் குருதி அளிக்க இளைஞர் கூட்டம் திரண்டு வந்ததால் செஞ்சிலுவை சங்கத்தினரால் குறிப்பிட்ட அளவை காட்டிலும் இருமடங்கு குருதி சேகரிக்கப்பட்டது. குருதி அளிக்கும் நிகழ்வினை கும்பகோணம் சுருதி மருத்துவ மைய நிறுவனர்.மருத்துவர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார். தேசியத்தலைவரின் பிறந்தநாள் கேக்கினை நாம் தமிழர் குடும்பத்தின் இளம் தளிர்கள் வெட்டி கொண்டாடினார்கள். மாவீரர் நாள் உரையை மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் வழக்கறிஞர்.மணி செந்தில்,பொறியாளர்.துருவன் செல்வமணி,சோழ மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை ஆகியோர் ஆற்றினார்கள். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை கல்வியாளர்.குமாயுன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவாரூர்,தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள் . இந்நிகழ்வினை தஞ்சை கிழக்கு மாவட்ட நகர,ஒன்றிய,அனைத்துப்பாசறையை சார்ந்த நாம் தமிழர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். திரளான இளைஞர் கூட்டம் நிகழ்வினில் பங்கேற்றனர்.

முந்தைய செய்திதென்சென்னை மேற்கு மாவட்டம், விருகம்பாக்கத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாள்