டெல்லியில் 17வது நாளாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

15

டெல்லியில் 17வது நாளாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

தலைநகர் டெல்லியில் 17வது நாளாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் சீமான் பங்கேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் ஆளுமையின்மையால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அக்கறையான அரசாக இருந்திருந்தால் அவர்களே போராடி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ தனது கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் பணிக்குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விவசாயிகள் கடன் என்பதனை முற்றிலும் எதிர்க்கிறேன். ஒரு நாட்டில் யார் வேண்டுமானாலும் கடனாளியாக ஏற்கலாம். ஆனால், உலகுக்கு உணவளிக்கிற விவசாயிகள் ஒருபோதும் கடனாளியாக இருக்கக் கூடாது. தனிப்பெரு முதலாளிகளுக்கு இலட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்கிற அரசால் விவசாயிகளின் இந்த அற்பக்கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாதா? என்று சீமான் கேள்வியெழுப்பினார்.

முந்தைய செய்திகோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: தீவிர வாக்குச் சேகரிப்பில் சீமான்