சுற்றறிக்கை: பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல் தொடர்பாக

44

சுற்றறிக்கை: பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல் தொடர்பாக
போக்குவரத்துத் துறையில் நடந்த முறைகேடுகளையும், குளறுபடிகளையும் மறைக்கப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றியிருக்கிற தமிழக அரசின் செயல் ஓர் அரசப்பயங்கரவாத நடவடிக்கை. நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஆடம்பரச் செலவினங்கள் மூலம் அரசின் நிதியிருப்பைக் காலிசெய்துவிட்டு அதனை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தி உழைக்கும் அடித்தட்டு மக்களின் அடிமடியில் கைவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயல்.
மக்களின் மீது தொடுக்கப்பட்ட இப்பொருளாதாரத் தாக்குதலைக் கண்டித்து வரும் 25ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் மக்களைத் திரள் ஆர்ப்பாட்டத்தினை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னெடுக்குமாறு கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் பகுதிகளில் முன்னெடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள், புகைப்படங்கள், மற்றும் காணொளிகள் போன்றவற்றை மாவட்டச் செய்தித்தொடர்பாளர் மூலமாக தலைமையகத்திற்கு மின்னஞ்சலில் (naamtamizharseithigal@gmail.com) அனுப்பி வைக்கவும்.

முந்தைய செய்திஅறிவிப்பு: 25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – மறைமலை நகர்
அடுத்த செய்திஆண்டாளை அவமதித்ததற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்?. -சீமான் சீற்றம்!