சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்

97

சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். எனவே தலைமைக்கு ஒத்துழைப்பு நல்கி அனைத்து மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வட்டம், கிளை குறித்த விவரங்கள் அடங்கிய தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை விரைந்து தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமோ நேரடியாகவோ அல்லது (ravanankudil@gmail.com) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கும்படி கடந்த 30-01-2018 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

வருகின்ற 12-08-2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்.

இடம்: BSV திருமண மண்டபம், எண்: 335, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை (CTH Road), டீச்சர்ஸ் காலனி, அம்பத்தூர், பாரத் மெட்ரிக் பள்ளி எதிரில்

இரண்டாம் நாள் 13-08-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, மாதாவரம், பொன்னேரி மற்றும் திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்.

இடம்: செங்குன்றம் நெல்,அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத் திருமண மாளிகை, எண்: 485, GNT சாலை, செங்குன்றம், புழல் சிறைக்கு அடுத்த சாலை சந்திப்பு

அவ்வயம் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் உறுப்பினர் அடையாள அட்டையுடன் குறித்த நாளில் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திசுற்றுசூழற் பாசறை சார்பாக பாரூர் ஏரியைச் சுற்றி பனை விதைக்கும் பணி