சிகிச்சை பெற்றுவரும் ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல்

45

சிகிச்சை பெற்றுவரும் ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி
==========================================

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்பதற்கு தடை விதித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு,எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டு இறைச்சி உணவு திருவிழா நடத்தியதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள் சூரஜ் என்ற மாணவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட மாணவர் சூரஜ் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (2-6-2017) காலை 10.00 மணியளவில் நேரில் சென்றார். அங்கிருந்த அவரது பெற்றோர்களிடம் சூரஜ்-ன் உடல்நிலை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்பொழுது மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வியனரசு, அன்புத்தென்னரசன், மாநில செய்திப்பிரிவு இணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஐ.ஐ.டி மாணவர் சுராஜ் மீதான காட்டுமிராண்டித்தாக்குதல்: ஏ.பி.வி.பியை கல்லூரிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது : சீமான் கண்டனம்!
அடுத்த செய்திகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தமிழ்ப்படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் இரங்கல்