சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை

104

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கில் மனித உரிமை ஆர்வளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.[WRGF id=89246]

இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வளரும், டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பாரிவேந்தன் அவர்கள் கலந்துரையாடினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாம் தமிழர் கட்சிஇளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்த விவரித்தார். கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பேராசிரியர் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் அவர்கள் எடுத்துரைத்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினக் கருத்தரங்கின் இறுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா மற்றும் நாடு முழுவதும் கொண்டு வரப்படவுள்ள தேசிய குடியுரிமைப் பதிவேடு சனநாயகத்திற்கு எதிரானது,
காசுமீரில் நடக்கும் வன்முறைகளை கண்டிப்பது, சீக்கியர் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வது, 7 தமிழர்களை விடுதலை செய்வது, மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரில் பலியானது போன்று இனி நிகழாது தடுப்பது , பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகப்பட்ச தண்டனை கொடுப்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: தி.நகர், சைதாப்பேட்டை, எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு