பதநீர் குடிக்கும் திருவிழா – கோவில்பட்டி நாம் தமிழர் மாணவர் பாசறை

48

‘அந்நியக் குளிர்பானங்களைப் புறக்கணிப்போம்! 
இயற்கைப் பானங்களைப் பருகிடுவோம்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து நுங்கு, இளநீர், பதநீர், கூழ் போன்ற இயற்கைப் பானங்களைப் அருந்துவதை ஊக்கப்படுத்தும்விதமாகவும், இயற்கைப் பானங்களை அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்விதமாகவும் நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த ‘பதநீர் குடிக்கும் திருவிழா’ 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாணவர்பாசறை பொறுப்பாளர்கள் பிரபாகரன், விஜய், மணி, சிந்தலபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தார். விழாவில் வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும், மக்கள் அனைவரும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து, இயற்கை குளிர்பானங்களை அருந்த வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பொது மக்களுக்கு பதநீர் வழங்கி வெளிநாட்டு குளிர்பானங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் இயற்கை குளிர்பானங்களை அருந்த வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் வெற்றிசீலன், மாநில இளைஞர்பாசறை செயலாளர் மதிவாணன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணா, மாவட்ட தலைவர் மகேசு, பொருளாளர் தியாகராசன், தொகுதி பொறுப்பாளர் மருதம்.மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் பரப்புரை – கொருக்குப்பேட்டை பொதுக்கூட்டம் [படங்கள்]
அடுத்த செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் வீதி வீதியாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பு – [படங்கள்]