கூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்

134

50 ஆண்டுகாலம் நாடகத்துறையில் தனி முத்திரையுடன் தடம்பதித்த ஐயா முத்துசாமி அவர்கள் நாடகம் மட்டுமல்லாது சிறுகதை எழுத்தாளராகவும் பரிணமித்தவர். அவர் பெற்ற பல உயரிய விருதுகள் அவரின் நீண்டகாலக் கலை இலக்கியப் பங்களிப்பிற்குச் சாட்சியாக இருக்கிறது. தனது அமைப்பின் மூலம் மிகச்சிறந்தத் தமிழ்க் கலைஞர்களை வார்த்தெடுத்த ஐயாவின் பணி என்றும் நினைவுகூறத்தக்கது.

நம் மண் சார்ந்த ஈடில்லா படைப்பாளியைத் தமிழகம் இழந்திருக்கிறது. கூத்தை நவீன வடிவத்திற்குக் கொண்டுவந்து அதை அடுத்தத் தலைமுறைக்கு அவர் கடத்தியதைப் போல் அடுத்ததடுத்தத் தலைமுறைக்குக் கூத்துக்கலையைக் கொண்டு செல்வதே அவருக்கு நாம் செய்யும் புகழ் வணக்கமாக இருக்கும்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்