குற்றவாளிகளின் பக்கம் நிற்பதை இந்தியா தவிர்க்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

22

குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயற்பட வேண்டும் என வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்ஆசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த மே 17 ஆம் நாள் இந்தியாவைத் தளமாகக் கொண்ட த ஏஜ் என்ற பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா தொடர்பில் இந்தியா தனது கொள்கைகளை மாறுசீரமைக்க வேண்டும். சிறீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயற்படவேண்டும். அதில் இருந்து இந்தியா பின்வாங்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளுக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவுகளை வழங்கவேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபையும் அதே தினத்தில் (17) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழுமையான ஆதரவுகளை வழங்குவதுடன், அனைத்துலக விசாரணைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கவேண்டும் என மேலும் தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை, சிறீலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய எட்டு நடவடிக்கைகளையும் முன்வைத்துள்ளது.

அதில் ஒன்று, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் கீழ் சிறீலங்காவை கொண்டுவந்து, அவர்களை அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : ஈழம் ஈ நியூஸ்

முந்தைய செய்திஇன்று காலை 10.30 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் மே 18 வேலூர் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது
அடுத்த செய்திஇந்தியாவை மிரட்டும் இலங்கை – சீனா செல்கிறார் பீரீஸ்