கும்பகோணம் – நாம் தமிழர் கட்சி நடத்திய சேனல் 4 வெளியிட்ட இலங்கை கொலைக்களம் திரையிடல் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்

7

தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத அதிபர் ராசபட்சேவினை போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரி, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானத்தினை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர். தீன.செல்வம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன் முன்னிலை வகித்தார்.குடந்தை நகர அமைப்பாளர் ரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை,மன்னார்குடி மருத்துவர் பாரதிச்செல்வன் ,மகளீர் பாசறை அமைப்பாளர் செல்வி வாணி,  மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்.மணி செந்தில் என்கிற திலீபன், பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினர். கூட்டத்தில் இலங்கையின் போர்க்களம் -சேனல் 4 வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்ற காட்சிகளின் தமிழ் வடிவம் திரையிடப் பட்டது. மக்கள் திரளாக இந்நிகழ்வில் பங்குப் பெற்று இன உணர்வெழுச்சி எய்தினர்.

முந்தைய செய்திஉதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்-சீமான் கண்டனம்
அடுத்த செய்திகோவை – நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்