காவிரி உரிமை மீட்பு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 15-09-2016 சென்னை

37

தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவிரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து வரும் 15-09- 2016 வியாழக்கிழமை அன்று சென்னை இராசரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து மாலை 2 மணிக்கு “காவிரி உரிமை மீட்பு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்” தொடங்குகிறது . இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து மாபெரும் எழுச்சிமிகுந்த பேரணி ஆர்ப்பாட்டம் 15-09-2016 வியாழக்கிழமை மிகச்சரியாக மாலை 2 மணிக்கு சென்னை இராசரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து தொடங்குகிறது.
இன உணர்வும், மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் ஒன்றாகக் கூடுவோம்!
எழுக தமிழா! எழுக!
இன உணர்வு கொண்டு எழுக!
இனத்தின் உரிமைக்காக்க எழுக!
திரள்வோம்! திரள்வோம்!
பகைமிரள திரள்வோம்!
பைந்தமிழ் இனத்தீரே!
நாம் தமிழர்!
– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

naam-tamilar-protest-rally-cauveri-water-dispute-issue

முந்தைய செய்திஇம்மானுவேல் சேகரன் நினைவுநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்
அடுத்த செய்திதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் முழுக் கடையடைப்புப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி ஆதரவு.