கண்ணகி பெருவிழா – பூம்புகார் கடலாடுதல் விழாவில் பெருஞ்சுடரேற்றி துவக்கம் | வீரத்தமிழர் முன்னணி

237

மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் கண்ணகி பெருவிழா 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பூம்புகாரில் நடைபெற்றது. கடலாடுதல் பெருவிழாவில் நாகை (வ) மண்டல செயலாளர் சு.கலியபெருமாள் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன் மற்றும் களஞ்சியம் சிவக்குமார் ஆகியோரால் கண்ணகி பெருவிழா பெருஞ்சுடரேற்றி துவக்கிவைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கண்ணகி கடலாடுதல் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இறைநெறி இமையவன் பெருவிழா பேருரையாற்றுகிறார்.

முந்தைய செய்திமதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்திநீட் தேர்வு மற்றும் அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றவேண்டும் – சீமான் வலியுறுத்தல்