கடலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

21

ராஜீவ் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை இன்றி தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து  உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றதிற்க்கும் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்த 24 மணி நேரத்துக்குள் அவர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தங்களின் அமைச்சரவை மூலம் ஆவண செய்து அதனை சட்டமன்றத்தில் அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து

கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் முத்து.அசோகன், மாவட்ட இணைத்தலைவர் சாரங்கபாணி, மாவட்ட இணைச் செயலாளர்  மு.ஜின்னா, நகர பொறுப்பாளர்கள்  ஜெயசங்கர்,பன்னீர் செல்வம்,தாமோதரன், இளைஞர் பாசறை நிர்வாகிகள் மா.அன்பு செல்வன் தி.கா.சுதாகாரன்,மணி, மாணவர் பாசறை அறிவுக்கரசு, திவாகரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் நெய்வேலி நகர பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர.

முந்தைய செய்திமாண்புமிகு தமிழக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றி… நன்றி….
அடுத்த செய்திதிருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்!