ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து தமிழக விவகாரங்களை கவனிக்க தனி பிரிவு அமைக்க இலங்கை அரசு முடிவு.

8

தமிழக விவகாரங்களை கண்காணிப்பதற்கென்று தனிப் பிரிவு ஒன்றை துவங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளாதாக அந்நாட்டு தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், இந்த விஷயத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முனைப்பாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை வெளியாகியதையடுத்து தமிழக அரசியல்வாதிகளின் கருத்துகள் ஆங்கிலத்திலும் அதிகமாக வெளிவருகிறது. இதனால் அவர்களின் கருத்துகள் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவருகின்றன. இது இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தருகிறது.

இதையடுத்து இனி தமிழக அரசியல்வாதிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அதற்கு எதிர் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வசதியாக தமிழக விவகாரங்களுக்கென்று தனியாக ஒரு பிரிவைத் துவங்குமாறு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உத்தரவிட்டுள்ளதாக அந்த இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசுபா.முத்துகுமார் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுகோட்டையில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம்.
அடுத்த செய்திசிறீலங்காவில் கொல்லப்பட்ட மக்களை பாதுகாக்க அனைத்துலகசமூகம் முன்வரவில்லை: லூயீஸ் ஆர்பர்