ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம்

59

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி இன்று மார்ச் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பெங்களூர் டவுன்ஹால் முன்பு மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இதில் மனித உரிமை ஆர்வலர்கள்,  தமிழ் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

  தீர்மானங்கள்

  • தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரும் தீர்மானத்தை இந்தியாவே ஐ நா மன்றத்தில் முன்னெடுக்க வேண்டும்.

 

  • ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ நா மன்றம் உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

 

  • தமிழர்கள் பகுதியிலிருந்து ராணுவத்தை வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.

 இந்திய மீனவர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் இலங்கை கடற்படையினர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

முந்தைய செய்திபெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் – ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 09/03/10/2014 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
அடுத்த செய்திகொலையான என்.எல்.சி. தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு! – சீமான் கோரிக்கை