உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரை தாயகம் அனுப்பி உதவி – பகரைன்

36

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

பகரைன் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் *செந்தமிழர் பாசறை பகரைன் நாம் தமிழர்* தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பல நல்ல விடயங்களை முன்னெடுத்து செய்துகொண்டிருக்கிறது. அதில் வியக்கதக்க வகையிலும் சவாலாகாவும் இருந்த ஒரு விடயமாக இருந்த சம்பவம்தான் இது.

ஈரோடு மாவட்டம் அரசூர் என்னும் கிராமத்தை சேர்ந்த திரு. பிரகதீஸ்வரன், (வயது 32) என்பவர் பகரைன் நாட்டில் ஓரியண்டல் பிரஸ் என்னும் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விபத்தினால் அவருடைய மூளை பக்கவாததால்(Brain stroke) பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் (ICU) பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருடைய ஒருபக்க கை கால் செயலிழந்து மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் செல்லாமல் அவருடைய பேசும் திறனை இழந்து கடந்த மார்ச் 27ஆம் தேதி பகரைன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவருடைய கை, கால்களும் மற்றும் பேசும் திறனிலும் எந்த மாற்றம் நிகழவில்லை. ஆகவே மேல் சிகிச்சைக்காகவும் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் அவரை தாயகம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை இருந்தது. அவரை தாயகம் அனுப்புவதற்காக நம்முடைய செந்தமிழர் பாசறை பகரைன் சார்பாக *”செந்தமிழர் மருத்துவ பாசறை உதவும் கரங்கள்”* என்ற 16 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தாயகம் அனுப்புவதற்கான முன்னெற்பாடுகளை இக்குழு செய்து வந்தது. கடுமையான பெரும் போராட்டங்களுக்கு இடையிலும் அரசு சம்பந்தப்பட்ட மற்றும் மருத்துவமனை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்கள் ஏற்பாடு செய்து பகரைன் இந்திய தூதரகத்தின் உதவியுடன், இந்திய விமான சேவை தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு, அவருக்கு சிறப்பு அனுமதி பெற்று மருத்துவரின் ஆலோசனையின் படி பிரகதீஸ்வரன் பயணம் செய்யலாம் என்று மருத்துவரின் ஒப்புதல் கடிதம் (Travel fitness) பெற்று , அதை இந்திய விமான சேவையிடம் சமர்ப்பணம் செய்து, அவர் செல்வதற்கான இருசக்கர நாற்காலி(wheel Chair) மற்றும் அவரை பாதுகாப்பாக அழைத்து செல்ல செந்தமிழர் பாசறையின் இரண்டு தம்பிகளின் ( Escort volunteer) உதவியுடன் அவர் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து அவருடைய சொந்த ஊரானா அரசூர் செல்ல செந்தமிழர் பாசறை பகரைன் சார்பாக அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த வாகனத்தில் செந்தமிழர் பாசறை பகரைன் உறவுகளும் தொடர்ந்து பயணித்து அவருடைய சொந்த ஊரான அரசூர் கிராமத்தில் உள்ள அவருடைய குடும்பத்தாரிடம் நேற்று இரவு (25/06/2020) ஒப்படைக்கப்பட்டார்.

*காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்*
*ஞாலத்தின் மாணப் பெரிது*

என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க செந்தமிழர் பாசறை பகரைன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாது மேலும் அவருடைய மருத்துவ செலவுகளுக்காக அவர் வேலை செய்த நிறுவனத்திடமும் மற்றும் இந்திய தூதரகத்திடம் செந்தமிழர் மருத்துவ பாசறை உதவும் கரங்கள் குழு ஒரு கோரிக்கை வைத்தது. வரும் காலங்களில் அவருக்கு தேவையான மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ள காரணத்தால், அந்த குடும்பத்தாருக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். நம்முடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர் வேலை செய்த நிறுவனத்திடம் இருந்து முன்தொகை மற்றும் விடுப்புக்கான பிடித்தம் இல்லாமல் அவருக்கு சேர வேண்டிய இறுதி தொகையை அந்த நிறுவனம் பிரகதீஸ்வரனின் மனைவி வங்கி கணக்கிற்க்கு செலுத்தியது. அதேபோல் இந்திய தூதரகமும் நாம் வைத்த கோரிக்கையை ஏற்று அவருடைய வங்கிக் கணக்கில் மருத்துவ செலவிற்காக தொகையை செலுத்துகிறோம் என்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதைப்பற்றி திரு பிரகதீஸ்வரனின் மனைவி நம்மிடம் கூறுகையில் அவர் கடந்த மூன்றரை மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தாயகம் திரும்புவாரா அவரை இனி நாங்கள் உயிருடன் பார்க்க முடியுமா ? என்ற ஒரு கேள்வி குறியுடன், என்னுடைய மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நான் எவ்வாறு என்னுடைய வாழ்க்கையை நடத்துவேன் என்றும் நாங்கள் சிரமப்பட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனுவை கொடுத்தோம். ஆதனால் பலன் எதுவும் அளிக்காத சூழ்நிலையில், நாங்கள் பகரைனில் உள்ள நாம் தமிழர் கட்சியின் உதவியை நாடினோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்து என்னுடைய கணவரை எங்களிடத்தில் ஒப்படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. நாங்கள் கூறுவதற்கு வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

பகரைன் செந்தமிழர் பாசறையின் தலைவர் கூறுகையில் இதேபோன்று சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நம் தமிழ் சொந்தங்களுக்கு நாம்மால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வோம். இச்செயலை முன்னெடுத்து செய்து கொண்டு இருக்கும் *செந்தமிழர் மருத்துவப்பாசறை உதவும் கரங்கள்* தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் செந்தமிழர் பாசறை பகரைன் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறப்பாக செயல்பட்ட அனைத்து உறவுகளுக்கும் செந்தமிழர் பாசறை பகரைன் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

*இவன்*
*செந்தமிழர் பாசறை பகரைன்*


முந்தைய செய்திவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தவரை போராடி தாயகம் அனுப்பிவைத்தல் – பகரைன் செந்தமிழர் பாசறை
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – கரூர் தொகுதி