[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.

61

ஈழத்தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களுக்காக நெல்லையை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 18-4-2011 அன்று தீக்குளித்து இறந்தார்.

இந்நிலையில் 20-4-2011 அன்று நெல்லை மாவட்டம் சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி அவர்களது வீட்டுக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்  ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, வழக்கறிஞர் சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன்,நெல்லை கரிகாலன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபூந்தமல்லி ஏதிலிகள் முகாம் உண்ணாவிரதம்
அடுத்த செய்திஇனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்