இலங்கை இனவேறி கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் பலி.

24

இலங்கை இனவெறி கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற தமிழக மீனவர் மரணம் அடைந்தார்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் இந்திய கடல் எல்லைக்குள் 14 கடல் மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினதைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை இனவெறி கடற்படையினர் மீனவர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்ததில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் படகிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பாண்டியனின் வயது 25.

இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து, இறந்த பாண்டியனின் உடலுடன் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் – நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலைசெய்யப்படுவதை கண்டித்து பேசிய செந்தமிழன் சீமான் மீது அடக்குமுறை தேசிய பாதுக்காப்பு சட்டத்தை பாய்ச்சி சிறையில் அடைத்த தமிழக அரசு, இலங்கை இனவெறி கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு என்ன செய்யப்போகிறது. மௌனம் காப்பதை தவிற.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.
அடுத்த செய்திபேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களை சீமான் சந்தித்தார்