[படங்கள் இணைப்பு]இலங்கையில் நடைபெற்ற பட விழாவை புறக்கணித்த அமிதாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து – நாம் தமிழர் கட்சியினர் தந்தி.

20

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போர் முடிந்த பிறகு அங்கு சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா[iifa]  நடைபெற்றது. போரில் நடைபெற்ற இனஅழிப்பு தமிழர்கள் மத்தியில் ஆறாமல் இருக்க அதற்குள் அங்கு விழா எடுத்து கொண்டாடுவது ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்விழாவிற்கு சிறப்பு பிரதிநிதியாக முன்னணி  இந்தி நடிகர்  அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து இவ்விழாவை அமிதாப்பச்சன் புறக்கணித்து இலங்கைக்கு செல்லகூடாது என நாம் தமிழர் கட்சி உட்பட சில தமிழ் அமைப்புகள் அவருடைய வீட்டிற்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அமிதாப்பச்சன் அவர்கள் விழாவில் பங்கேற்காமல் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்.

எனவே இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது ஆணையின்படி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான ஆவல் கணேசன் அவர்கள் தலைமையில், அன்புதென்னரசன் அவர்கள் முன்னிலை வகிக்க நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அமிதாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்பப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அமுதாநம்பி,தங்கராசு, வழக்கறிஞர் ராசீவ்காந்தி,வழக்கறிஞர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமிதாப் அவர்களின் முகவரி;

amitabachan

jalsa bungalow

juhuroad

juhu antheri (west)

mumbai-400053

முந்தைய செய்தி29-1-2011 அன்று காலை 9 மணியளவில் மாவீரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.