இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு!

8

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும், பொதுநலவாய அரச தலைவர்கள் அனைவரும் கட்டாயம் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினை வெளிக்காட்ட இலங்கைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தியமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திதேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.
அடுத்த செய்திவவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு கடிதம்.