இலங்­கை­யர்­க­ளுக்­கான புதிய குடி­வ­ரவு முறைமை: கனே­டிய அர­சினால் அறி­முகம்

32

இலங்கை உள்­ளிட்ட கணி­ச­மான அள­வி­லான நாடு­க­ளுக்­கான உயி­ரியல் இயல்பு சம்­பந்­தப்­பட்ட அடை­யாளத் தேவைப்­பா­டு­களை கனடா இந்த வருட இறுதி தொடக்கம் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கனே­டிய ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்த புதிய முறை­மையின் கீழ் கனே­டிய சுற்­றுலா, மாண­வர் மற்றும் தொழில் சம்­பந்­த­மான விசா ஒன்­றுக்­கென விண்­ணப்­பிக்­கும்­போது பய­ணிகள் தங்­களின் கைவிரல் அடை­யா­ளங்­க­ளையும் நிழற்­ப­டங்­க­ளையும் சமர்ப்­பிக்க வேண்டும். அல்­பே­னியா, அல்­ஜீ­ரியா, கொங்கோ, ஜன­நா­யகக் குடி­ய­ரசு, எரித்­தி­ரியா, லிபியா, நைஜீ­ரியா, சவூதி அரே­பியா, சோமா­லியா, தென் சூடான், சூடான் மற்றும் டியு­னி­ஷியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த பய­ணிகள் தங்கள் உயி­ரியல் இயல்பு நிலைத் தக­வலை வழங்க வேண்­டு­மென்ற தேவைப்­பாடு கடந்த ஒக்­டோபர் 23ஆம் திகதி தொடக்கம் அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரும் அதே­ச­மயம், எதிர்­வரும் டிசம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் இத்­த­கைய தேவைப்பாடு இலங்கை மற்றும் கணி­ச­மான அள­வி­லான வேறு நாடு­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக இருக்கப் போவ­தா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கொலம்­பியா, ஹெய்ட்டி மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகள் மீது இந்த மாத முற்­ப­கு­தி­யில மேற்­படி உயி­ரியல் இயல்பு நிலைத் தேவைப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­ட தைத் தொடர்ந்தே கனே­டிய பிர­ஜா­வு­ரிமை மற்றும் குடி­வ­ரவுத் திணைக்­களம் நாடுகள் பற்­றிய பட்­டி­ய­லொன்றை வெளி­யிட்­டுள்­ள து.

நாட்டின் எல்­லையைத் தாண்டி உள் நுழை­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­களை கடி­ன­மாக்கும் பொருட்டு கடந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த கனே­டிய குடி­வ­ரவு முறை­மைச்­சட்­டத்தைப் பாது­காக்கும் அங்­க­மாக இத்­த­கைய நாடு­க­ளி­லி­ருந்து கன­டா­வுக்கு வருகை தருவோர் தங்கள் விசா விண்­ணப்­பங்­க­ளி­லான தங்­களின் கைவிரல் அடை­யா­ளங்­க­ளையும் நிழற்­ப­டங்­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­கென மேல­திக கட்­ட­ண­மாக 85 டொலர்­களை ஒட்­டா­வா­வுக்கு செலுத்த வேண்டும்.

விசா விண்­ணப்ப நிரா­க­ரிப்­புக்­களின் பரி­மா­ணங்கள் அல்­லது வீதங்கள், நாடு கடத்தல் உத்­த­ர­வுகள், அகதி அந்­தஸ்து கோரல்கள், உரிய ஆவ­ணங்­க­ளின்றி வந்­த­டையும் அல்­லது பொய்­யான ஆள­டை­யா­ளங்­களைப் பயன்­ப­டுத்தி நாட்­டிற்குள் நுழைய முயன்று வரும் நாட்­ட­வர்கள் மற்றும் கன­டாவின் வெளி­நாட்டு மற்றும் வர்த்­தக கொள்கை நோக்­கங்­க­ளுடன் அவர்கள் கொண்­டுள்ள சம்­பந்தம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே மேற்­கு­றிப்­பிட்ட நாடுகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

சுற்­றுலா, மாணவர் அல்­லது தற்­கா­லிக வெளி­நாட்டுப் பணி­யாளர் விசாக்­க­ளுக்­கென விண்­ணப்­பித்­துள்ள 300,000 விண்­ணப்­ப­தா­ரர்­களில் சுமார் 20 சதவீதத்தினர் முதலாவது வருடத்தில் தங்களின் உயிரியல் இயல்பு நிலை பற்றிய தகவலை சமர்ப்பிக்க வேண்டி வருமெனவும் சிறுவர், முதியோர் மற்றும் இராஜதந்திரிகள் இத்தகைய தேவைப்பாட்டிலிருந்து விதிவி லக்குப் பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திநவநீதம்பிள்ளையை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரவரனக்கு எதிராக துண்டுப்பிரசூரம்
அடுத்த செய்திதேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யவில்லையாம் ! மகிந்தவின் புலம்பல்