ஆர்.கே நகர் தேர்தல்களம்: 11-12-2017 11வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

94

செய்தி: ஆர்.கே நகர் தேர்தல்களம்: 11-12-2017 11வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

11வது நாளான நேற்று 11-12-2017 (திங்கட்கிழமை) காலை 09 மணி முதல் 12 மணிவரை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் கலைக்கோட்டுதயம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், இராவணன், கதிர்.இராஜேந்திரன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன், மகளிர் பாசறை அமுதா நம்பி, பெரம்பூர் வெற்றித்தமிழன், ஆர்.கே நகர் சதாம் மற்றும் விஜி, மாணவர் பாசறை கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 47வது வட்டம், அம்பேத்கர் நகர், மீனாம்பாள் நகர், பாரதி நகர், சிக்கரந்தபாளையம், ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு சீமான் தலைமையில் 47வது வட்டம், மன்னப்பன் தெரு, H4 காவல் நிலையம் அருகில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன், நெல்லை அ.வியனரசு, இளைஞர் பாசறை அறிவுச்செல்வன், வேட்பாளர் கலைக்கோட்டுதயம், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்.கே நகர் சதாம் மற்றும் விஜி பொதுக்கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டனர்.

இறுதியாக சீமான் பேசுகையில் இந்திய நாடு வல்லாதிக்க கனவோடு டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, உலகிலேயே வலிமைமிக்க கடற்படையை வைத்திருக்கிற நாடு என்று மார்தட்டிக்கொண்டு புயலில் சிக்கி கடலில் தத்தளிக்கிற சொந்தநாட்டு மக்களைக் காப்பற்ற வக்கற்ற தேசத்தில் பிறந்ததற்காக பெரும் அவமானமடைகிறேன் என்றும் இந்த நாட்டில் வளர்ச்சி வளர்ச்சி என்று வாய்கிழிய பேசுவார்களே ஒழிய, ஒரு பேரிடர் நிகழ்ந்தால் அதற்கான மேலாண்மை அதிலிருந்து தன் நாட்டு மக்களைப் பாதுக்காக்க, தற்காக்க எந்தவொரு அடிப்படை வசதியும் நம் அரசுகளிடம் இல்லை! என்றும் மத்திய மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டினார். மேலும் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளின் தவறுகளை எடுத்துரைத்தும் அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விளக்கியும் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்களை ஆதரித்து உரையாற்றினார்.

முந்தைய செய்திபத்திரிக்கையாளர் சந்திப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ்த்தேசிய கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 13வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்