அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி

220

அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு: https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)
அடுத்த செய்திஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)