இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் 22-3-2017

3

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: 22-3-2017 வேட்புமனு தாக்கல் | நாம் தமிழர் கட்சி
============================================================
நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் நாளை 22-03-2017 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் நிகழ்வு நடைபெறும்.

அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி