திருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி,  சிந்தாமணியில் சீமான்  பரப்புரை

3

செய்திக்குறிப்பு: திருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து விலாச்சேரி,  சிந்தாமணியில் சீமான்  பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் (12-05-2019 ஒட்டப்பிடாரம்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.

ஒன்பதாம் நாளான நேற்று  12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் திருப்பரங்குன்றம்*சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து மதுரை, விலாச்சேரி மந்தைத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *திருப்பரங்குன்றம், சிந்தாமணி கலையரங்கம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்

சிந்தாமணி பொதுக்கூட்டம் : சீமான் பரப்புரை

விலாச்சேரி பொதுக்கூட்டம் : காளியம்மாள் பரப்புரை

பத்தாம் நாளான இன்று 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி, பொட்டலூரணி சாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் ஒட்டப்பிடாரம் கடைவீதியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு: https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
செந்தில்குமார். கு (+91- 9600 70 9263)
மாநிலச் செய்திப்பிரிவு இணை செயலாளர்