சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

0

க.எண்: 2020020048
நாள்: 27.02.2020

சுற்றறிக்கை:

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கீழ்க்காணும் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது

நாள் நேரம் கலந்தாய்வு விவரம் கலந்தாய்வு நடைபெறும் இடம்
01-03-2020

ஞாயிறு

பிற்பகல் 02 மணியளவில் விழுப்புரம் தொகுதிக் கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும்.
மாலை 03 மணியளவில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வு மற்றும் திருக்கோயிலூர் தொகுதிக் கலந்தாய்வு
02-03-2020

திங்கள்

காலை 11 மணியளவில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஏற்காடு மற்றும் ஆத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு KVM மண்டபம் (மந்தைவெளி அருகில்)
கள்ளக்குறிச்சி.

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்