சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அவசர அறிவிப்பு

7

 

க.எண்: 2020010002
நாள்: 07.01.2020

 சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அவசர அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்கள் தொகுதிக்குட்பட்ட மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட உறவுகளின் பெயர், போட்டியிட்ட மாவட்டக்குழு/ஒன்றியக்குழு வார்டு எண், போட்டியிட்ட ஒவ்வொரு வார்டுக்கும் உட்பட்ட (பஞ்சாயத்து) கிராமங்களின் பெயர், பதிவான மொத்த வாக்குகள், வெற்றிபெற்றவர் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர் எந்தெந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு?, நாம் தமிழர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் எவ்வளவு?, தங்கள் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தாத மாவட்டக்குழு/ஒன்றியக்குழு வார்டுகள் பற்றிய விவரங்களை வருகின்ற 13-01-2020 திங்கட்கிழமைக்குள்ளாக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கு நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களுக்குரிய அலுவலரிடம் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

இரா.இராவணன்

தேர்தல் பணிச்செயலாளர்