சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக

653

க.எண்: 2019110171

நாள்: 03.11.2019

சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி 

எதிர்வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்ததை போல தனித்துப் போட்டியிடவிருக்கிறது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதால் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு நமது கட்சி சார்பாக போட்டியிட விரும்பும் உறவுகள், உள்ளாட்சிப் பொறுப்புகளை குறிப்பிட்டு முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட உரிய தகவல்களுடன் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை நகல், கட்சி உறுப்பினர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விருப்ப மனுவை தத்தம் தொகுதிச் செயலாளர் / தொகுதித் தலைவரிடம் உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு பெறப்படும் விருப்ப மனுக்களை தொகுதித் தலைவர் மற்றும் தொகுதிச் செயலாளர் இணைந்து சேகரித்து, எதிர்வரும் 10-11-2019க்கு முன்னதாக கட்சி தலைமை அலுவலகத்தில் உரிய முறையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதிரி விருப்ப மனு படிவம் நமது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.naamtamilar.org) இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி 


உள்ளாட்சித் தேர்தல்

மாதிரி விருப்ப மனு

பெயர் புகைப்படம்
தந்தை/கணவர் பெயர்
வயது பாலினம்
முகவரி மின்னஞ்சல்
தொடர்பு எண்
கல்வி
தொழில்
தொகுதி
மாவட்டம்
வாக்குரிமைப் பகுதி வாக்காளர் அட்டை எண்
கட்சிப் பொறுப்பு
போட்டியிட விரும்பும் உள்ளாட்சிப் பொறுப்பு(கள்) பகுதி எண் (Ward No.) ஆம்/இல்லை
ஒன்றியக்குழு உறுப்பினர்
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்
பேரூராட்சி உறுப்பினர்
பேரூராட்சித் தலைவர்
நகராட்சி உறுப்பினர்
நகராட்சித் தலைவர்
மாநகராட்சி உறுப்பினர்
மாநகராட்சி மேயர்
 

தொகுதித் தலைவர் / செயலாளர் கையொப்பம்

 

மனு வழங்குபவர்
கையொப்பம்

உள்ளாட்சித் தேர்தல் மாதிரி விருப்ப மனு

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் ஈரோடு மற்றும்  திருப்பூர் மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி