கிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவிப்பு

45

அறிவிப்பு: கிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் | நாம் தமிழர் கட்சி

நாளை சனவரி 26, குடியரசு நாளையொட்டி தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. எனவே, நாம் தமிழர் உறவுகள் தத்தம் கிராமங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அவசியம் பங்கேற்று கிராமப்புற மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் தேவையான தீர்மானங்களை நிறைவேற்ற வழிவகைச் செய்யவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூடுவது தொடர்பாகவும், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்து, அவற்றின் வாயிலாக அரசுக்கு அழுத்தமும், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புற உட்கட்டமைப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, தூயக் குடிநீர் வசதி, சீரான சாலை வசதி, பேருந்து வசதி, தடையற்ற மின்சார வசதி, தரமான மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் தமிழர் உறவுகளை அறிவுறுத்துகிறேன்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்