இரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் பரப்புரை பொதுக்கூட்டம் – வ.உ.சி நகர்

0

07-04-2017 இரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் பரப்புரை பொதுக்கூட்டம் – வ.உ.சி நகர் | நாம் தமிழர் கட்சி

ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து ஏழாவது நாளாக இன்று  05-04-2017 (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் 42 வது வட்டம், தண்டையார்பேட்டை, தேர்தல் அலுவலகம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  வீடு வீடாக நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபாடவுள்ளார். மேலும் இன்று மாலை 4 மணியளவில் ஜீவா நகர் அருகேயுள்ள வீதிகளில் வாக்கு சேகரிக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, வ.உ.சி நகர் கடைவீதியில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி 

1 COMMENT

  1. அண்ணா, 07/04/2017 வ.உ.சி நகரில் நடந்த பரப்புரையில் என் குழந்தையை உங்கள் மடியில் அமர்த்தி கொண்டீர்கள். அதன் புகைபடம் எனக்கு கிடைக்குமா? ஆவலுடன்.. ராஜலட்சுமி

Comments are closed.