இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் – சீமான் அறிவிப்பு

19

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் – சீமான் அறிவிப்பு

நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று 21-03-2017 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் அவர்களை வேட்பாளராக அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறது. எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாது தனித்து களம்காண்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி