அறிவிப்பு: நவ. 02, ‘துளி’ திட்டப் பணிகள் குறித்த மாநிலக் கலந்தாய்வு – திருச்சி

184

க.எண்: 2019100166

நாள்: 23.10.2019

‘துளி’ திட்டப் பணிகள் குறித்த மாநிலக் கலந்தாய்வு

தமிழ்த் தேசிய இனம் தனது விடுதலைப் பாதையில் எத்தனையோ தடைகளைச் சந்தித்து வந்திருக்கிறது. உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட தமிழ்த் தேசிய இனம் தனக்கான உரிமைகளைத் தானே காத்துக் கொண்டு, தனக்கான விடுதலையைத் தானே தேடிக் கொண்டு, போராடி தன்னைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையைத்தான் நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட அடிமை தேசிய இனத்தின் மக்கள் நாம் என்று அழைக்கிறார். எனவே நம்மை நாமே உருவாக்கிக்கொள்ள, தகவமைத்துக் கொள்ள, கட்டமைத்துக் கொள்ள நமக்கென்று பொருளாதாரம் சார்ந்த கட்டமைப்பு தேவைப்படுகிறது.

இன்றைய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பு படையாக, இன மீட்சி உரிமைக் குரலாக திகழ்ந்து வருகிற நாம் தமிழர் கட்சி தனது இலட்சியப் பயணத்தை எவ்வித தடையும் இல்லாமல் உறுதியோடு தொடரவேண்டிய நிலையில் இருக்கிறது. பாதையை தேடாதே; உருவாக்கு! என்று சொன்ன தலைவரின் மக்கள் நாம். எனவே நமக்கென இலட்சியப் பாதையை உருவாக்கி இலக்கை வென்றெடுக்க பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றினை மிகச்சரியாக உருவாக்கிட ‘துளி’ என்கின்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

அதன்படி ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு மாதம் ரூபாய் 1000/- வழங்கக்கூடிய 10 புரவலர்களையும், ஒரு ஆண்டுக்கான துளித் தொகையான ரூபாய் 12000/- ஒரே முறையில் வழங்கக்கூடிய 3 ஈகையாளர்களையும் கண்டறிந்து இந்த ‘துளி’ திட்டத்தில் இணைத்து நாம் தமிழர் கட்சியின் உறுதிமிக்க இலட்சியப் பயணம் தடையறாது பயணிக்க ஒரு மகத்தான பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அன்று திருச்சி மாநகரில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், தொகுதிச் செயலாளர்கள்,  மற்றும் ஈகையாளர்கள், கொடையாளர்கள், புரவலர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுகிற மாபெரும் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

எனவே அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தொகுதிச் செயலாளர்களும், அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் ‘துளி’ திட்டப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, விருப்பமுள்ள புரவலர்கள், கொடையாளர்களைக் கண்டறிந்து ‘துளி‘ திட்டத்தில் இணைக்கின்ற பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

துளித்துளியாய் இணைவோம்! பெரும் கடலாகும் கனவோடு!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: ஹுமாயுன் (+91-9443186070 / 9894011810) / சாரதிராஜா (+91-9500767579)

முந்தைய செய்திபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி
அடுத்த செய்திஎன்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.! – அசுரன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து மடல்