பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

தொடர்புடைய பதிவுகள்

One Comment

 1. இபுராஹிம், துபை

  > உள்ளத்தில் உதித்தவை இங்கே உதிர்க்கிறேன்…!

  தனது வாழ்க்கையில் சிறு தோல்வியை கூட சகிக்க விரும்பாதவன்…சக மனிதனை ஏமாற்ற 
  துணிந்துவிட்டான் என்று அர்த்தம்…(அவனை தான் நாம் செல்வந்தன் என்று சமூகத்தில் கூறுகிறோம்.)

  பண நாணயத்தை சிறிது கூட இழக்க விரும்பாதவன்…மற்றவரின் பணத்தை மோசடி செய்து சம்பாதித்துள்ளான் என்று அர்த்தம்…(அவனை தான் நாம் 
  செல்வந்தன் என்று சமூகத்தில் கூறுகிறோம்.)

  > சிறிதளவு கூட ஈகை குணமற்றவன்…
  சக மனிதனை கூட தின்று தன்னுயிரை காத்து கொள்ள துணிந்துவிட்டான் என்று அர்த்தம்…(அவனை தான் நாம் செல்வந்தன் என்று சமூகத்தில் கூறுகிறோம்.)

  > பிறரின் சிறு தவறை கூட சுட்டிக்காட்ட தயங்காதவன்…தனது பெருங்குற்றத்தை மறைக்க பார்க்கிறான் என்று அர்த்தம் ..

  பிறரின் பொறுமையை கண்டு எள்ளி நகைப்பவன்…தான் பொய்யன் என்பதை ஒப்புக்கொள்வதாக அர்த்தம்….

  பிறரால் பாதிக்கப்பட்டவனைப் பார்த்து பொறுமையை கடைபிடி என்று அறிவுரை வழங்குபவன்….தானும் குற்றத்தில் ஒரு பங்கு உள்ளவன் என்று ஒப்பு கொள்கிறான் என்று அர்த்தம்..

  > தன் கண்முன்னால் நடக்கும் கொடுமையை கண்டு கொள்ளாமல் இருக்கும் மனிதன் …இவ்வுலகின் கொடிய மிருகம் என்று அர்த்தம்.

  சக மனிதனை புரிந்துகொள்ளாத ஒருவன்…
  சாக்கடைக்கு சமமானவன். 

  > தவறு என்று தெரிந்தும் தன்னை திருத்திக்கொள்ளாத ஒருவன்…உலகில் நடமாடும் அசிங்கமான மிருகம்  என்று அர்த்தம்.

  > பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..
  > எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் 
  வேறொன்றறியேன் பராபரமே…
  > இட்டார் பெரியோர்..இடாதார் இழி குலத்தோர்..
  > தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்..
  > யாதும் ஊரே யாவரும் கேளிர்..ஒன்றே குளம் ஒருவனே தேவன்…

  இந்த பொன்மொழிக்கு சொந்தமான எமது தமிழ் இனம்..
  நமக்கு சிறப்பான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிவிட்டு 
  இவ்வுலகை விட்டு பிரிந்திட்ட பெருந்தகைகளை பின்பற்றுவோம்
  > தமிழினம் உலகின் பெருமை மிக்க இனம்..பறை சாற்றுவோம் 
  நாம் யாரென்று இவ்வுலகுக்கே..

  நாம் தமிழர்..நாமே தமிழர்.

Comments are closed.

©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு