important news
செய்திகள் >> இந்தியா 
 
 
 
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை - உண்மை நிலை1
 
 
 
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை - உண்மை நிலை2
 
 
 
செந்தமிழன் சீமானை விடுதலை செய்யகோரி கனடாவிலுள்ள இந்திய துணை தூதராலயத்துக்கு முன் நடந்த போராட்டம்.
 
 
செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரை தீர்ப்பாயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
 
 
தோழர் தியாகு அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரை தீர்ப்பாயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
 
 
இந்திய எல்லைக்குள் தாக்கப்படுகிறோம் - பாதிக்கப்பட்ட தமிழக மீனவர் பேட்டி காணொளி.
 
 
 
தமிழக மீனவர்கள் தாக்க படுவதை கண்டித்து செந்தமிழன் சீமான் ஆற்றிய உரைவீச்சு.
 
 
 

ஈகி முத்துக்குமார் பற்றிய குறும்படம். 

திரு நல்லதுரை, வடக்கு தெரு, கல்லபெரம்பூர், தஞ்சாவூர் வட்டம் - 613603, எண் : 9442317631, cm.selva@gmail.com
 
 
 
 
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். 11, கே.கே.தங்கவேல் வீதி, பெரியார் நகர, ஜோலார்பேட்டை- 635851. தொலைபேசி: 04179-241503.
 
 
 
 
இலங்கை போர் குற்றம்
மேலும் படங்களுக்கு மேலுள்ள படத்தின் மேல் சொடுக்கவும்
 
 
 
 
 
 

மனித கழிவை மனிதர் அகற்றும் இழிநிலை மாற்றப்படும் : மத்திய சமுக நீதித்துறை அமைச்சகம்

2010-07-30 07:48:26

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மனிதர் கழிவை மனிதரே அகற்றும் அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்  என்று மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் டி. நெப்போலியன் தெரிவித்துள்ளார்.


நேற்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதுலளித்த அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். தற்போது மனிதக் கழிவை மனிதர் அகற்றும் அவலப் பணியில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் 18 மாநிலங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மூலமாக மறுவாழ்வு நிவாரண உதவிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்க நடவடிகை எடுக்கப்படும் என்றும் . மாற்றுத் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களுக்காக கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதக் கழிவை அகற்றும் முறையை கைவிட விருப்பம் உள்ளவர்களுக்கு  வழங்கப்படும் கடன் முறையாக அவர்களுக்கு பயனடைகிறார்களா  என்பதை  கண்காணிக்கவேண்டும்  என்று  மாநில அரசுகளையும்  மற்றும் யூனியம் பிரதேசங்களையும்  கேட்டுக்கொள்ளப்பட்டது

உத்தரப் பிரதேசம், பிகார், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்தான் தற்போது உலர் கழிவறைகள் உள்ளன.மனிதக் கழிவை மனிதர் அகற்றும் முறை இந்த மாநிலங்களில்தான் தொடர்ந்து அமலில் உள்ளது. இங்குள்ள உலர் கழிவறைகளை நவீன கழிவறைகளாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது. என்றும் வருகிற டிசம்பருக்குள் உலர் கழிப்பறைகள் அனைத்தும்  நவீன கழிப்பறைகளாக மாற்றப்படும என்று தெரிவித்துள்ளார்.