இன அழிப்பு போரை நிறுத்த கோரி, பிரித்தானியாவில் தம்பி பரமேஸ்வரன் கடைபிடித்த உண்ணாவிரத போராட்டம் உன்னதமானது. இந்த போராட்டத்தை கொட்சைபடுத்தும் விதமாக பரமேஸ்வரன் மீது தவறான குற்றசாட்டுகள் சில பத்திரிக்கைகளால் முன்னிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற தம்பிக்கு முடிவில் நீதி கிடைத்துள்ளது. அவரை நாம் தமிழர் கட்சி பெரிதும் வாழ்த்துகிறது. எமது இன விடுதலை நோக்கிய ஜனநாயக பயணத்தில் எம்மோடு தொடர்ந்து நிற்க தம்பி பரமேஸ்வரனை வலியுறுத்துகிறோம்.
டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரன் வெற்றி
.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போரை நிறுத்த கோரியும் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் தேதி இலங்கை தமிழர் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டார்.
டெய்லி மெயில் என்ற பத்திரிகை அக்ரோபர் 9 அன்று பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மீது உண்மைக்குப் புறம்பாக குற்றச்சாட்டு ஒன்றைப் பிரசுரித்திருந்தது. "உண்ணாவிரதியின் 7 மில்லியன் பிக் மக்" என்று தலைப்பிடப்பட்ட அந்தச் செய்தியில் திரு.சுப்பிரமணியம் தனது உண்ணாவிரத காலத்தில் இரகசியமாக பேகர்களைச் சாப்பிட்டதாக பொய்யான குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன் அவரது இந்த நடவடிக்கையால் காவல் துறையினர் பொது மக்களின் பணத்தினை விரயமாக்க நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சண் பத்திரிகை இணையத்தளத்தில் "உண்ணாவிரதி இதை விரும்பினார்" என்ற செய்தியில் மீண்டும் இதே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் நேற்று இலண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அது குறித்த தவறான செய்தியைத் திருத்திக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்தார்கள்.
இரு பத்திரிகைகளும் பரமேஸ்வரனிடம் மனப்பூர்வமாகவும் முழுமையாகவும் மன்னிப்புக் கோரி இருப்பதுடன் அவரது சட்டச் செலவுகள் உட்பட கணிசமான இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளனர்.
இது குறித்து பரமேஸ்வரன் கூறியதாவது:
"இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால் எனது மனச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன் நான் மீண்டும் எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும்.
கடந்த 8 மாத காலமாக எனது வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததுடன் அந்தக் கால கட்டங்களில் எனது சொந்தவாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சிந்தித்து இருக்கிறேன். குறித்த பத்திரிகைகள் பிரசுரித்த பொய்யான செய்திகளின் விளைவாகஎன்னில் எந்தத் தவறும் இல்லாதபோதும் நான் எனது நண்பர்களை இழந்தேன் எனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டேன் அத்துடன் தமிழ் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.
குறித்த இரு பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அப் பத்திரிகைகள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை எனது உண்ணாவிரத காலத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் என்னை மதித்து என்னுடன் உதவியாக நின்றவர்களுக்கும் நிருபிக்க வேண்டியது எனது கடமை என்பதை நான் உணர்ந்தேன்.
தற்பொழுது இரு பத்திரிகைகளும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளன என்பதால் அந்த மக்கள் பத்திரிகைகளின் மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வதுடன் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்களென நான் மனப்புர்வமாக நம்புகிறேன்.
ஈழத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என்றார்.
பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் தெரிவித்துள்ளதாவது:
பொய்யான குற்றச்சாட்டுக்கள் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து இந்த 8 மாதங்களாக அந்தச் செய்திகள் தமிழ் சமுதாயத்திலும் அதனைத் தாண்டியும் ஏற்படுத்திய அவப்பெயர் சந்தேகம் அவநம்பிக்கை என்பவற்றுடனேயே பரமேஸ்வரன் வாழ வேண்டி இருந்தது.
இரு பத்திரிகைகளும் இறுதியில் உண்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து தாம் பரமேஸ்வரனிற்கு உருவாக்கிய மனவேதனைக்கும் துன்பத்திற்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரன் வெற்றி. இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போரை நிறுத்த கோரியும் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் தேதி இலங்கை தமிழர் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டார்.