கேரள எல்லையை நோக்கி 4-வது நாளாக மக்கள் பேரணி – காணொளி இணைப்பு

31

தேனி மாவட்டம் கம்பம்-கூடலூரில் இருந்து லோயர் கேம்ப் வழியாக பொதுமக்கள் இன்று 4-வது நாளாக கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் சமரசம் பேசி வருகின்றனர்.
மேலும் கேரளத்தில் உள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோம்பை தேவாரம் பகுதியில் இருந்து சாக்கலூத்துமெட்டு வழியாக கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்த பேரணியிலும் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

 

நேற்று நடந்த பேரணியின் காணொளி:

நன்றி: தினமணி மற்றும் நக்கீரன்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம்
அடுத்த செய்திகூடங்குளம் விவகாரத்தை திசைதிருப்புகிறது மத்திய அரசு: செந்தமிழன் சீமான் பேட்டி