18-09-2016 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

394

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 71வது நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை, காலை சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்விக்கற்க முடியாத அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பைப் படித்தவர்!
பஞ்சமர் குழுந்தைகள் படிப்பதற்காகப் பள்ளிக்கூடங்கள் தொடங்க காரணமாக இருந்தவர்!
எம்மக்கள் வேண்டுவதெல்லாம் சமூக விடுதலையைத்தான்; மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் அந்த அடிப்படை உரிமையைத்தான் என்ற முழக்கத்தை முன் வைத்துப் போராடியவர்!
மனிதப் பாகுபாடுகளைக் கட்டமைக்கும் பிறவிபேதத்தின் வயதும் வலிமையும் கொஞ்சநஞ்சமல்ல என்பதை உணர்ந்த நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பிறவிபேதத்தைப் போதிக்கும் சாத்திரங்கள், சடங்குகள், வேதங்கள், வியாக்கியானங்கள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்ட
புரட்சியாளர்!
பெருமைமிக்க நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரின் 71ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (18-09-2016). அவருக்குப் பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!
அவர் நினைவைப் போற்றுகிற இந்நாளில் எந்த நோக்கத்திக்காக அவர் இறுதிவரை உறுதியாக நின்றாரோ அந்த நோக்கத்தைத் தமிழ்த்தேசிய
இனப் பிள்ளைகள் நாம் கடைசிவரை கடைப்பிடித்துக் களத்திலே பணியாற்றுவோம் என்ற உறுதியை ஏற்போம்!
நாம் தமிழர்!
– இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது​

முந்தைய செய்திகவிரிச்செல்வன் பா. விக்னேசு க்கு இறுதி மரியாதை – காணொளி – புகைப்படங்கள்
அடுத்த செய்திகாவிரி நதிநீர் உரிமைகளுக்காக போராடிவரும் மாணவர் இளைஞர் அமைப்புகளுக்கு – நாம் தமிழர் மாணவர் பாசறை ஆதரவு