விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

35

11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் [ புகைப்படங்கள் ]
—————————————–
உலகிற்கே உணவு படைக்கும் உழவர் கூட்டம் இன்று பயிர் வாடியதால் உயிர் வாடிச் சாகும் துயரநிலை தொடர்கிறது. இதைத் தடுக்கத் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11-01-2017 புதன்கிழமை, மாலை 2 மணிக்குச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி விவாசாயிகளின் தொடர் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

மேலும் புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCSzZ3eVNCRTNZZTQ

​இறுதியாக, கடும் வறட்சியினால் பயிர்கள் கருகிய நிலையில் கடன் தொல்லையால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்களைத் தாங்க இயலாது தங்களது உயிர்களையே மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாமலும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யாமலும் அவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க மறுத்து வரும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சீமான் கண்டனவுரையாற்றினார்

முந்தைய செய்திவர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா! – அறிவுமதி | சீமான்
அடுத்த செய்திஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து!