திருமுருகப் பெருவிழா (11-02-2018) – சில முக்கிய செய்திகள்

343

திருமுருகப் பெருவிழா (11-02-2018) – சில முக்கிய செய்திகள்

வேல் ஊர்வலம் :

குமரிக்கண்டம் தமிழர்களுடையது என்பதினால், குமரக்கடவுளே தமிழர் இறை என்பதாலும், வரலாற்றை மதிக்கும் பொருட்டு குமரியின் முனையில் இருந்து சரியாக 11-02-2018 காலை 9.30 மணிக்கு வேல் ஊர்வலம் புறப்படும். காவடி, வேல் மாலைகள் என சிறியவர்கள், பெண்கள் என அனைவரும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த வேல் ஊர்வலத்தை மதிர்ப்பிற்குரிய ஐயா கவிஞர். அறிவுமதி அவர்கள் கொடியசைத்து துவங்கிவைக்க இருக்கிறார்கள். இந்த ஊர்வலத்தை கன்னியாகுமரி மண்டல வீரத்தமிழர் முன்னணி மற்றும் இளைஞர் பாசறை பிள்ளைகள் தொடர இருக்கிறார்கள். கன்னியாகுமரியை சுற்றிலும் உள்ள நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, குளச்சல், பதமநாதபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதி உறவுகள் இந்த ஊர்வலத்தில் பங்குபெற வேண்டுகிறோம் (மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள: (9751854361; 9843476014; 7708260631; 8904324688; 9442248351)

கவிஞர்.அறிவுமதியின் – “தமிழ்முருகன்” வரலாறு :

முருகன் யார் ? முருகன் இந்துக்கடவுளா ? முருகனுக்கு ஏன் பூனூல் போடவில்லை ? என நீள்கின்ற கேள்விகளுக்கு பொதுத்தளத்தில் இருந்தே வருகின்ற பதிலாக “ஐயா கவிஞர். அறிவுமதி” அவர்களின் எழுத்தில் “தமிழ்முருகன் வரலாறு” புத்தகம் நாம்தமிழர் கட்சியின் “களம்” வெளியீட்டில், வெளியிடப்பட்டு கூட்டத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த புத்தகம் நிறைய அதிர்வலைகளை பொதுத்தளத்தில் ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்கிறேன். பொதுக்கூட்டத்திற்கு வருகின்ற அனைவரும் தங்கள் செலவுக்கான தொகைகளில் கூடுதலாக 100 ரூபாய் எடுத்துவந்து ஐயாவின் “தமிழ் முருகன் வரலாறு” புத்தகத்தை பெற்று உதவ வேண்டுகிறேன்.

வேலும் – காவடியும் :

வெளி மாவட்டங்களில் இருந்து கூட்டாக தனித்த வாகனங்களில் வருகின்ற உறவுகள் தங்கள் பகுதியில் இருந்து 20 மேற்பட்ட உறவுகளோடு வருகின்றபோது தங்களிடம் காவடியோ, வேலோ இருந்தால் எடுத்துவரவும். திருச்செந்தூரில் காவடியில் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் தங்கள் ஊர்களில் இருந்து கொண்டுவந்து பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

திருமுருகப் பெருவிழா :

பறையிசை, கருப்புசாமி நாடகம்; மள்ளர் கம்பம் : புத்தக வெளியீடு : நாம்தமிழர் கட்சியின் மூத்தநிர்வாகிகளின் பெருவிழா பேருரை ; இமையவன், தென்னன் மெய்மன், தமிழ்க்கடல் ஐயா.நெல்லை கண்ணன், சீமான் போன்றவர்கள் பேச இருப்பதால் சரியான நேரத்தில் (3:30 இங்கு பேரணி, 4:30 கூட்டத் தொடக்கம்) கூட்டம் தொடங்கிவிடும். எனவே வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற உறவுகள் தங்களின் பயண தூரத்தையும், அதற்கான நேரத்தையும் சரியாக கணித்து கடைப்பிடித்து, கவனமாக வந்துசேரும் படி உறவின் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

பெருவிழா நிகழ்வு பெருஞ்செலவை எதிர்கொண்டு நிற்பதால் பொருளாதார ரீதியில் உதவ விரும்புகின்ற உறவுகள், ஓரிரு நாளிற்குள் உங்கள் உதவிகளை செய்தால் எமக்கு உதவியாக இருக்கும்.

எல்லோரும் வாங்க…!
இப்படிக்கு நாங்க…!

வீரத்தமிழர் முன்னணி

முந்தைய செய்திஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்!
அடுத்த செய்திபேருந்தில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: புகார் மனு கொடுத்த கையூட்டு-ஊழல் ஒழிப்புப்பாசறையினர் கைது