சீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017

745

முக்கிய அறிவிப்பு:- திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017
========================================
தலைநிலம் தந்த தலைவன், குறிஞ்சி நில முதல்வன் முப்பாட்டன் முருகனின் “திருமுருகப் பெருவிழா” வருகின்ற பிப்ரவரி, 09 தேதி தைப்பூச திருநாள் கொண்டாட்டங்களை மாநிலம் முழுமைக்கும் இருக்கும் நாம்தமிழர் கட்சி உறவுகள் வீரத்தமிழர் முன்னணியுடன் இணைந்து தங்கள் ஊர் நகரங்களில் திருமுருகன் குடில் அமைத்து, அதில் முருகனின் சிலை மற்றும் வேல் வைத்து வழிபாடு செய்து, குடிலில் கூடுவோருக்கு தேனுடன் கலந்த திணைமாவு, பழங்கள் இவைகளை கொடுத்து கொண்டாடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா வருகின்ற 19-02-2017, ஞாயிற்று கிழமை ஆறுபடை வீடுகளில் ஒன்றான #திருத்தணியில் நடக்க இருக்கிறது. மரபுவழி கரகாட்டம், சிவதாண்டவ இசை நிகழ்ச்சி, பறை இசை, கருப்பு நிகழ்ச்சி, திருமுருகப் பெருவிழா பேருரைகள் என நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.

திருத்தணியில் நடக்கும் திருமுருகப் பெருவிழாவில் நாம்தமிழர் கட்சி, மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, உழவர் பாசறை, மருத்துவ பாசறை ஆட்சிமொழி பாசறை, கலை இலக்கிய பண்பாட்டுபாசறை மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையை சேர்ந்த மாநில, மண்டலா, மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்கள் என அனைவரும் தவறாமல் நிகழ்வில் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.
—–
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபாவின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திமுதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து