மும்பை தாராவியில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விழா-

69

மும்பை நாம் தமிழர் கட்சி சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் கட்சியின் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் தலைமையில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி தாராவி ஒருங்கிணைப்பாளர் மணி மாறன் முன்னிலையில்  201  பானைகள் வைத்து பெண்கள் பொங்கலிடும் நிகழ்வு  காலை 5.30 மணிக்கு கட்சியினரின் உறுதி மொழியேற்புடன் தொடங்கியது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோரேகான் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் திரு.சூசை மைக்கேல் ஜார்ஜ் அவர்கள் கலந்து கொண்டு ஐயன் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார் அதனை தொடர்ந்து மாதவன் குழுவினரின் பறையிசை அடிக்கும் நிகழ்வும் தமிழ் பயிலும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ்  தாய் வாழ்த்து பாடினர் அதனை தொடர்ந்து  கும்மிப்பாட்டு நடனம், ரஞ்சித் குழுவினரின் பொங்கல் பாடல்கள் அடங்கிய இசை கச்சேரியும் நடந்தது இந்த விழாவை தாராவி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நிலா ராணி ரூபன் ,தாராவி மகளிர் பாசறை செயலாளர் மெர்சி நாடோடி தமிழன் தாராவி செயலாளர் சகாய டேனிசு,மலாட் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, பொங்கல் விழா துணை அமைப்பாளர் நாடோடி தமிழன்,விழா பொறுப்பாளர் சசிக்குமார் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர் இதில் தாராவியை சேர்ந்த ஆறுமுகம்,சேகர் அண்டோ,ஜெயக்குமார்,அரவிந்த், ரூபன், தியாக ராஜன்,அந்தோணி, கோரேகான்,அம்பர்நாத் பகுதியை சேர்ந்த விஜய் ,கண்ணன் டார்வின், மற்றும் மலாட், புனே, தானே, புதிய மும்பை போன்ற பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரும் பொது மக்களும்  திரளாக கலந்து விழாவை சிறப்பித்தனர்

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
அடுத்த செய்திதமிழர் திருநாள் பொங்கல் திருவிழா-திருவரங்கம் தொகுதி