இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம்

548

28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமயிடமான சென்னை இராவணன் குடிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இளைஞர் பாசறையின் மாநிலச் செயலாளர்கள் இயக்குனர் ஜெகதீசப்பாண்டியன், இயக்குனர் பாலமுரளிவர்மன்,வழக்கறிஞர் மணிசெந்தில், வழக்கறிஞர் இராசீவ்காந்தி,வழக்கறிஞர் விஜயராகவன், சிவராசன், துருவன் செல்வமணி, இசை மதிவாணன், பேரா.அருளினியன், தமிழினியன், தமிழ்ச்செல்வன், மகேந்திரன், இ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு. தவிர்க்க முடியாத காரணங்களினால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத காரணங்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத பேராசிரியர் கல்யாணசுந்தரம், அகழ்வான் கணேசு ஆகியோர் கூட்டத்தீர்மானங்களுக்கான ஆதரவினை அலைபேசி வாயிலாக தெரிவித்தார்கள்.

தீர்மானங்கள்:
1.மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பினால் நாடு மிக குழப்பமான பொருளாதார சீர்கேட்டினை அடைந்து வருகிறது. இவ்வறிவிப்பினால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகிறார்கள். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து வரும் சனவரி 11ஆம் தேதி புதன்கிழமை காலை10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக சென்னை ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்துவது என இம்மாநிலக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.
2. இளைஞர் பாசறை நடத்தும் வருகிற சனவரி 29ஆம் தேதி மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம் இம்முறை கன்னியாகுமரியில் நடத்துவது என்றும், அன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில பொதுக்குழு கன்னியாகுமரியில் நடத்துவது என்றும், அன்று மாலை பொதுக் கூட்டத்தில் இளைஞர் பாசறையின் கொடி அறிவிப்பு, செயல்பாட்டு ஆவணம் ஆகியவற்றை வெளியிடுவது என்றும் இம்மாநிலக் குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.
3.மாநில இளைஞர் பாசறை செயலாளர்களில் ஒருவராக திரு. ஆசைத்தம்பி அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் அறிவிக்க வேண்டுமென இம்மாநிலக்குழு பரிந்துரை செய்கிறது. மேலும் மாநில இளைஞர் பாசறை முழுவீச்சில் இயங்கிட தனி வங்கிக் கணக்கு ஒன்றினை உண்டாக்கிடவும் இம்மாநிலக்குழு தீர்மானிக்கிறது. மேலும் இளைஞர் பாசறையின் தீவிர செயல்பாட்டிற்காக மாநிலக்குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களையும், நிதிப் பொறுப்பாளராக இயக்குனர் ஜெகதீசபாண்டியன் அவர்களையும், தகவல் தொடர்பாளராக வழக்கறிஞர் இராசீவ்காந்தி அவர்களையும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக இயக்குனர் ஜெகதீசபாண்டியன், இயக்குனர் பாலமுரளிவர்மன், வழக்கறிஞர் மணிசெந்தில், பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் இராசீவ்காந்தி ஆகியோரை இம்மாநிலக்குழு தெரிவு செய்து தலைமை ஒருங்கிணப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களிடம் இம்மாநிலக்குழு பரிந்துரைக்கிறது.
4. மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் இளைஞர் பாசறை நிர்வாகத்திற்கென தலா மாதம் ஒன்றுக்கு ரூ 500 ம் தொகுதி இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 250 ம் இளைஞர் பாசறையின் வங்கிக் கணக்கில் செலுத்திட வேண்டும் எனவும், இந்நிதி நிர்வாகத்தினை பாசறையின் நிதி பொருப்பாளர் இயக்குனர் ஜெகதீசபாண்டியன் அவர்கள் மேற்கொள்ளுவார் என்றும் இம்மாநிலக்குழு தீர்மானிக்கிறது.
5. மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் மாநில தலைமைக்குழுவினால் பிரித்தளிக்கப்பட்ட தொகுதிகளில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களோடு கலந்து ஆலோசித்து இளைஞர் பாசறை தொகுதிச் செயலாளர்களை தேர்ந்தெடுத்து வருகிற சனவரி 11ம் தேதியன்று மாநில இளைஞர் பாசறை தலைமைக்குழுவிடம் அளிக்க வேண்டும் எனவும் இம்மாநில குழு தீர்மானிக்கிறது.

முந்தைய செய்தி30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்தி07-01-2017 பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் – கோடம்பாக்கம்