இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல்

84

10-03-2017: இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல்
========================================

கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதே தாக்குதலில் செரோன் என்ற தமிழக மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர் செரோனை இன்று 10-03-2017 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து சீமான் தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களின் அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு கொலையுண்ட மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம்
அடுத்த செய்திநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017