அறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – வடகாடு

799

அறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

இயற்கை வேளாண் பேரறிஞர், நமது பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று 30-12-2017 (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வடகாடு, திலீபன் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெறவிருக்கிறது: இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றுகிறார்.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மகளிர், மாணவர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நம்மாழ்வார் நினைவைப் போற்றும் விதமாக சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

உழவு இல்லையேல் உணவு இல்லை!
உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை! – என்று உணர்த்தியவர்.

விதைத்துக்கொண்டே இரு!
முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு உரம்! – என்று கற்பித்தவர்.

செயற்கை இரசாயன உரங்களைப் பயிர்களின் வேர்களில் கொட்டி விளைவதெல்லாம் விசமாக விளைகிறதே! – என்று உயிர் வலித்தவர்.

இயற்கை வேளாண்மையின் ஈடுஇணையற்ற அவசியத்தைத் தன் வாழ்வில் இறுதி மூச்சுவரை எடுத்து இயம்பியவர்.

தன்னை நேசிக்காது தான் பிறந்த மண்ணையும் இந்த மக்களையும் உயிரினும் மேலாக நேசித்த பேரன்புக்காரர்.

இயற்கை வேளாண் பேரறிஞர்
தமிழ்ப் பெருங்குடியோன்
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாள் இன்று (30-12-2017)

மதிப்புமிக்க அந்தப் பெருந்தகைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

நாள்: 30-12-2017 (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு
இடம்: திலீபன் திடல், வடகாடு, ஆலங்குடி தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 9551039855 / 8608759428


தலைமை அலுவலகச் செய்திகுறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை